நாகையில் நடைபெற்ற கருத்து கேட்பு நிகழ்ச்சியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் வாக்குவாதம்
நாகையில் நடைபெற்ற கருத்து கேட்பு நிகழ்ச்சியில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
கருத்து கேட்பு நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக யார் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பது என்பது கேள்விகுறியாக உள்ளது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன்அன்சாரி நாகை தொகுதி மக்களின் கருத்தை கேட்டு முதல்- அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதா? என்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கருத்தை அறிய நாகையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று ஒரு பெட்டி வைக்கப்பட்டது. இந்த கருத்துகேட்பு நிகழ்ச்சியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 9 மணியளவில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்கள், வேன்கள், கார்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வந்து, கருத்து கேட்பு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கருத்து கேட்பு பெட்டியில் போட்டனர். அப்போது, எழுத, படிக்க தெரியாத பெண்கள் சிலர் தங்களது படிவத்தை அருகில் இருந்த அ.தி.மு.க. பிரமுகரிடம் கொடுத்து பூர்த்தி செய்தனர். அப்போது பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்தனர்.
வாக்குவாதம்
இதனால் அங்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர்கள் சிலர் படிவத்தை பூர்த்தி செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேர் தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிலையில், படிவம் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து கருத்து தெரிவிக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஏமாற்றமடைந்த பொதுமக்கள் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கிருந்து தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. திடீரென ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர், எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றி அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.