தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள இடுகாட்டை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு
அரியலூர் அருகே ஆள்வாய்கீழ்நத்தம் கிராமத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள இடுகாட்டை மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தாமரைக்குளம்,
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 241 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.
இடுகாட்டை மீட்டு தர மனு
அரியலூர் அருகே ஆள்வாய் கீழ்நத்தம் கிராமத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள இடுகாட்டை மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர். அதில், ஆள்வாய் கீழ்நத்தம் பகுதியில் இருளர் சமூகத்தினர் இறந்தால் இறுதி காரியங்கள் செய்வதற்காக முன்னோர்கள் காலத்தில் இருந்து இடுகாடு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இடுகாட்டிற்கு அருகில் வசித்து வரும் தனிநபர்கள் எங்களது இடுகாட்டை ஆக்கிரமித்தும், இடுகாட்டுக்கு யாரும் செல்ல முடியாத வகையில் சீமைக்கருவேல முட்களை வெட்டி போட்டும் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் எங்களது இடுகாட்டை தனிநபர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் 2-ம் இடம் பெற்ற பளிங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் மாதவன், ஆனந்தராஜ் ஆகிய இருவருக்கும் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியை உஷாவையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து, புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 98 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, துணை கலெக்டர் மங்கலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, புதுவாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.