புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-02-13 22:45 GMT
புதுக்கோட்டை,

மாற்று இடம்

கீரனூர் சாலையோர வியாபாரிகளுக்கு பூக்கடைகள், காய்கறிக்கடைகள், பழக்கடைகள், ஜவுளிக்கடைகள், தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி கடைகளை கட்டித்தர வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்து சுமார் 50 கடைகள் கட்டித்தரக்கோரி கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்தபட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அனைவருக்கும் கடைகள் கட்டித்தரப்படும் என கூறினார். ஆனால் இது வரை கடைகள் கட்டித்தரப்படவில்லை. இதைத்தொடர்ந்து உடனடியாக கடைகளை கட்டித்தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நிர்வாகி பஞ்ச நாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் செங்கோடன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்