ஹஜ் பயணம் மேற்கொள்ள விமான டிக்கெட் பெற்று தருவதாக ரூ.79½ லட்சம் மோசடி
ஹஜ் பயணம் மேற்கொள்ள விமான டிக்கெட் பெற்று தருவதாக கூறி ரூ.79½ லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஆம்பூர்,
சுற்றுலா ஏஜென்சி
வாணியம்பாடி நூருல்லாபேட்டையை சேர்ந்தவர் வகீல்அஹமத் (வயது 40). இவர் பஸ் நிலையம் அருகே சுற்றுலா ஏஜென்சி நடத்தி வருகிறார். வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விமான டிக்கெட் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வகீல்அஹமத், அகமதாபாத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்துடன் வாணியம்பாடியில் இருந்து கடந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 30 பேருக்கு விமான டிக்கெட் பெறுவதற்காக தலா ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் என மொத்தம் ரூ.79½ லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தார். அதன்படி விமான டிக்கெட் பெற்றுத்தர அந்த நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் விமான டிக்கெட்களை குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை. சரிவர பதிலும் சொல்லவில்லை.
புகார்
இந்த நிலையில் ரூ.79½ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வகீல்அஹமது வாணியம்பாடி டவுன் போலீசில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் வாணியம்பாடி கோர்ட்டு உத்தரவின்பேரில் அகமதாபாத் சென்ற போலீசார் விமான டிக்கெட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இம்ரான் பிசால் பூர்வாலா (30) என்பவரை கைது செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் தவுக்பிசால் பூர்வாலா, யாஸ்மீன், பரிதோஷ்ஷா, ஆசிப் யாகூப்பாய், ரிசன்டிவாலா ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.