மக்கள் நீதிமன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு

பாபநாசம்,
பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் பாபநாசம் நீதிபதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் வக்கீல் சங்க தலைவர் கம்பன், செயலாளர் ஜெயக்குமார், வக்கீல்கள் கண்ணன், இளையராஜா, நடுவர் எழுத்தர் மோகன், சட்ட பணிகள் குழு முதுநிலை உதவியாளர் எழில்வாணன், மற்றும் கோர்ட்டு பணியாளர்கள் கலந்துகொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 750 வசூலிக்கப்பட்டது.