ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்: எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், மனோகரனை காணவில்லை என்று போலீசில் புகார்
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், மனோகரன் ஆகியோரை காணவில்லை என்று போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை,
போலீசில் புகார்
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம் தொகுதி), மனோகரன் (வாசுதேவநல்லூர் தொகுதி) ஆகிய இருவரும் ஆதரவு அளித்து இருந்தனர். இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், மனேகரனை காணவில்லை என்று போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் 17-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலையில் ஒரு புகார் கொடுத்தனர்.
அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதனை கடந்த 9-ந் தேதியில் இருந்து காணவில்லை. அவரை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் கடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே எம்.எல்.ஏ. சண்முகநாதனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவகிரி போலீசில் புகார்
இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க.வினர் சிவகிரி கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சாமுவேல் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகாரில், “வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரனை கடந்த 10 நாட்களாக காணவில்லை. உடனே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
எம்.எல்.ஏ. விளக்கம்
புகார் குறித்து எம்.எல்.ஏ. மனோகரனிடம் போனில் கேட்டபோது அவர் கூறுகையில், “நான் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளேன். தற்போது முதல்-அமைச்சருடன் சென்னையில் தான் உள்ளேன். நான் எங்கும் செல்லவில்லை“ என்று கூறினார்.