வெளிநாட்டில் பணிபுரிய பெண் பல் டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் பணிபுரிய பெண் பல் டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பல் டாக்டர்கள்
சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுவதற்கு பெண் பல் டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல் மருத்துவத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன் 55 வயதுக்கு உட்பட்ட பெண் பல் டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு டாக்டர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது வளரும் நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்ப குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரமும், வளர்ந்த நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் வழங்கப்படும். இலவசமாக உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா, சவுதி அரேபிய அரசின் சட்டதிட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விவரங்களுக்கு...
விருப்பமும், தகுதியும் உள்ள பெண் பல் டாக்டர்கள் தங்களின் முழுவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை ஷீஸ்மீனீநீறீபீக்ஷீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு 044–2250 5886, 2250 2267, 2250 0417 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.