மறைமலையடிகள் சாலையில் தெருவோரக் கடைகளை ஒழுங்குபடுத்திய ஆணையர்

புதுவை மறைமலையடிகள் சாலையில் தெருவோர கடைகளை நகராட்சி ஆணையர் ஒழுங்குபடுத்தினார்.

Update: 2017-02-13 22:15 GMT
சாலை ஆக்கிரமிப்பு

புதுவை மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் மேல் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டு அதன் மீது சிலர் பழக்கடை வைத்து நடத்தி வந்தனர். சமீப காலமாக அவர்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கடைகளை விரித்தனர்.

ஒழுங்குபடுத்தப்பட்டது

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தெருவோர கடைக்காரர்கள் தங்களது கடைகளை ஒழுங்குபடுத்துமாறு நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் யாரும் கடைகளை முறைப்படுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் தெருவோர கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்தால் கடைகள் அகற்றப்படும் என்று ஆணையர் சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்