பா.ஜனதா மேலிடத்துக்கு எடியூரப்பா கருப்பு பணம் கொடுத்தார் மந்திரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா கருப்பு பணம் கொடுத்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய மந்திரிகள்.
பெங்களூரு,
பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா கருப்பு பணம் கொடுத்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய மந்திரிகள் அதுதொடர்பான உரையாடல் சி.டி.யையும் வெளியிட்டுள்ளனர்.
பா.ஜனதா மேலிடத்திற்கு கருப்பு பணம்
முதல்-மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி கொடுத்துள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூத்த மந்திரிகள் ரமேஷ்குமார், பசவராஜ் ராயரெட்டி, எம்.பி.பட்டீல், சரணபிரகாஷ் பட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோர் கூட்டாக பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி அனந்தகுமார் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை வெளியிட்டனர். அதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்த சி.டி.யில் மத்திய மந்திரி அனந்தகுமார், எடியூரப்பாவிடம் பேசும்போது, சித்தராமையா ரூ.1,000 கோடியை காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுத்துள்ளதாக புகார் கூறி இருக்கிறார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலை இந்த புகாரை முன்வைத்தே சந்திக்க முடியும். இது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆனால் நமது கட்சி(பா.ஜனதா) மேலிடத்திற்கு நீங்களும் கருப்பு பணம் கொடுத்துள்ளர்களே. நானும் கொடுத்துள்ளேனே என்று கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
அதற்கு எடியூரப்பா, நாம் கொடுத்த பணம் குறித்து குறிப்பேட்டில்(டைரி) இடம் பெறவில்லையே என்று சிரித்தபடியே பதில் கூறியுள்ளார். இவை அனைத்து உரையாடலும் சி.டி.யில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் எடியூரப்பா பா.ஜனதா கட்சி மேலிடத்திற்கு கருப்பு பணத்தை கொடுத்துள்ளார். இதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.
முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை எடியூரப்பாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை எடியூரப்பா கூறி வருகிறார். ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பா, எந்த ஆதாரங்களும் இல்லாமல் சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது சரியல்ல.
வருமான வரி சோதனை
இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் ரூ.65 கோடி சித்தராமையாவுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறினார். இந்த தகவல் வருமான வரி சோதனையில் தெரியவந்தாக சொல்கிறார்கள். வருமான வரி சோதனை பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சட்டம் உள்ளது. அப்படி இருக்கும்போது எடியூரப்பாவுக்கு அந்த தகவல் எப்படி கிடைத்தது?. இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்ட பணிகள் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.