மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தூக்கி வீசப்பட்ட வாலிபர், கார் மோதி பலி

Update: 2017-02-13 21:45 GMT

செங்கல்பட்டு,

வந்தவாசியை சேர்ந்தவர் அமானுல்லா. இவருடைய மகன் ரபீக்(வயது 28). இவர், நேற்று முன்தினம் தனது உறவினரான இம்ரான் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை வந்து விட்டு மீண்டும் வந்தவாசி திரும்பிச் சென்றார்.

செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே வந்த போது சாலையின் குறுக்கே மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதின. இதில் ரபீக் தூக்கி வீசப்பட்டதில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று ரபீக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ரபீக், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இம்ரான் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்