தூத்துக்குடியில் காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்கள் அமோக விற்பனை

தூத்துக்குடியில் காதலர் தினத்தையொட்டி நேற்று ரோஜாபூக்கள் அமோகமாக விற்பனை நடந்தது. காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14–ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு ரோஜாப்பூ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி கொ

Update: 2017-02-13 22:45 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காதலர் தினத்தையொட்டி நேற்று ரோஜாபூக்கள் அமோகமாக விற்பனை நடந்தது.

காதலர் தினம்

பிப்ரவரி மாதம் 14–ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு ரோஜாப்பூ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு நேற்று பல்வேறு வண்ணங்களில் ரோஜாப் பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

ரோஜாப் பூ

இது குறித்து பூ வியாபாரி பட்டு கூறும் போது, காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஓசூரில் இருந்து சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக வந்து உள்ளன. இதில் ஒரு ரோஜாப்பூ ரூ.15–க்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு பூங்கொத்து ரூ.100 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு காதலர் தினத்துக்காக ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகரித்து உள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகள்