அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2017-02-13 21:14 GMT
தாம்பரம்,

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்

சென்னையை அடுத்த சிட்லபாக்கம், கலைவாணர் சாலை, ஜெயேந்திரர் அவென்யுவை சேர்ந்தவர் பி.சந்திரசேகரன் (வயது 54). பல்லாவரம் நகராட்சியின் 29-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர். இவரது மனைவி உமா (49). இவரும் அதே பகுதி அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர். இவர்களுக்கு சுவாதி என்ற மகள் உள்ளார்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, சந்திரசேகர் பெங்களூரு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை உமா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த உமா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்