முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட அ.தி.மு.க.வினர் ஆதரவு
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் உள்பட அ.தி.மு.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உட்கட்சி பிரச்சினை
அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பொதுச்செயலாளர் சசிகலா ஒரு அணியாகவும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்து தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்
திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி, வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவை கட்சியில் நுழைவதற்கே ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களை ஓரிடத்தில் தங்கவைத்து முதல்-அமைச்சர் ஆக நினைக்கிறார். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக சிறந்த முடிவுகளை எடுத்துள்ளார். 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களையும், தமிழக மக்களின் ஆதரவையும் பெற்ற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.
திருப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவருமான பழனிச்சாமி நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, ஜெயலலிதா இருந்தபோதே, முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் அவர் நியமித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 100 சதவீத தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப் பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும்போதுதான் வருகிற 2021-ம் ஆண்டிலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். இல்லையென்றால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் இழப்பை சந்திக்கும் என்றார்.
இதேபோல் திருப்பூர் மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.கே.எம்.முத்து, திருப்பூர் எஸ்.வி.காலனியில் உள்ள தனது அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தோடு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்து அறிவித்தனர்.
மாவட்ட துணைச்செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவருமான எம்.சண்முகம் தலைமையில் அலகுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிவசுப்பிரமணியம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சிதம்பரம், ஊராட்சி கழக செயலாளர்கள் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் நல்லாட்சி தொடர்ந்திட ஆதரவு தருவது, ஜெயலலிதாவால் வாக்கு பெற்று வெற்றியடைந்தவர்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.