தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
தவணை முறையில் பணம் வசூல் செய்து பல கோடி ரூபாய் ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பலரிடம் தவணை முறையில் பணம் கட்டினால், அதிக அளவு பணம் தருகிறோம் என்று கூறினர். இதை நம்பி மாவட்டத்தில் ஏராளமானவர்கள் தவணை முறையில் பணம் கட்டினோம். பின்னர் தவணை முடிந்து பணத்தை திரும்ப கேட்டபோது அவர்கள் தரவில்லை. ஒரு சிலருக்கு போலி காசோலை கொடுத்துள்ளார்கள். எப்போது கேட்டாலும் தருகிறோம் என்ற பதில் மட்டும் கூறுகிறார்கள். ஆனால் பணத்தை வழங்கவில்லை. கடந்த 2 வருடமாக ஏமாற்றி வருகின்றனர். எனவே தவணை முறையில் பணம் வசூல் செய்து பல கோடி ரூபாய் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
ரூ.30 கோடி வரை...
இது குறித்து மனு கொடுக்க வந்தவர்கள் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் இந்த போலி நிறுவனத்தை நம்பி 3 ஆயிரம் பேர் களப்பணியாளர்களாக சேர்ந்தோம். இதில் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் தவணை முறையில் பணத்தை கட்டி பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளோம். கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.30 கோடி வரை பொது மக்கள் பணம் கட்டியுள்ளோம். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்தரவு
புஞ்சைகாளக்குறிச்சி அருகே உள்ள வாணியக் கரையை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் சிலர் ஒரு மனு கொடுத்தனர். அதில், மண்மங்கலம், வரப்பாளையம், நன்னியூர்புதூர், நன்னியூர், கடம்பன்குறிச்சி ஆகிய ஊர்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் நன்னியூர்புதூர்- கலிங்கம் அருகில் பாப்புலர் முதலியார் வாய்க்காலின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போது சேதம் அடைந்துள்ளது. பாலம் உடைந்து விபத்து ஏற்படும் முன்பு அதை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும். அதேபோன்று அந்த பகுதியில் மேலும் 4 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றையும் இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோன்று நேற்று ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.