தாது ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

தாதுவள ஆய்வுக் கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். என அழைக்கப்படுகிறது.

Update: 2017-02-13 14:15 GMT
 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது மண்ணியல் மற்றும் மண் இயற்பியல் துறையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜியாலஜி, ஜியோ இயற்பியல் தொடர்பான எம்.எஸ்சி., எம்.டெக் படிப்புகளை படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 30-1-2017-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-3-2017-ந் தேதி. இது பற்றிய விரிவான விவரங்களை www.mecl.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்