நிலக்கரி நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு

கோல் இந்தியா எனப்படும் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது.

Update: 2017-02-13 13:45 GMT
பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் மொத்தம் 1319 இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 3-2-2017-ந் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதல் அவகாசம் வழங்கி தேதி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. 24-2-2017-ந் தேதி வரை அவகாச காலம் நீடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதற்கான எழுத்துத் தேர்வு 26-3-2017 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.coalindia.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

மேலும் செய்திகள்