மும்பை உள்பட 10 மாநகராட்சி தேர்தல் 1,268 வார்டுகளில் 9,199 பேர் போட்டி

மும்பை உள்பட 10 மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள ஆயிரத்து 268 வார்டுகளில் 9 ஆயிரத்து 199 பேர் போட்டியிடுகின்றனர்.

Update: 2017-02-12 23:36 GMT

மும்பை,

மும்பை உள்பட 10 மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள ஆயிரத்து 268 வார்டுகளில் 9 ஆயிரத்து 199 பேர் போட்டியிடுகின்றனர்.

10 மாநகராட்சி தேர்தல்

மராட்டியத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளின் பதவி காலம் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிறைவு பெறுகிறது. இந்த 10 மாநகராட்சிகளுக்கும் வருகிற 21–ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மராட்டிய நவநிர்மாண் சேனா உள்ளிட்ட பிரதான கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள வேட்பாளர்கள் அந்தந்த வார்டுகளில் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்

வார்டு, வேட்பாளர்கள் விவரம்

இந்தநிலையில், 10 மாநகராட்சிகளிலும் உள்ள வார்டுகள், அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

மும்பையில் 227 வார்டு– 2,271 வேட்பாளர்கள், தானே 131 வார்டு– 1,134 வேட்பாளர்கள், உல்லாஸ்நகர் 78 வார்டு– 821 வேட்பாளர்கள், நாசிக் 122 வார்டு– 1,089 வேட்பாளர்கள், புனே 162 வார்டு 623 வேட்பாளர்கள், பிம்பிரி–சிஞ்வாட் 128 வார்டு– 804 வேட்பாளர்கள், சோலாப்பூர் 102 வார்டு– 478 வேட்பாளர்கள், அகோலா 80 வார்டு– 579 வேட்பாளர்கள், அமராவதி 87– 626 வேட்பாளர்கள், நாக்பூர் 151 வார்டு– 774 வேட்பாளர்கள்.

மேலும் செய்திகள்