கன்னியாகுமரி, மயிலாடி பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டுமானப்பணி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆய்வு
கன்னியாகுமரி, மயிலாடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டுமானப் பணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆய்வு செய்தார்.;
நாகர்கோவில்,
பசுமை வீடுகள் கட்டுமான பணி
மயிலாடி பேரூராட்சி காமராஜர் நகர் என்ற பகுதியில் ஒருவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியையும், மார்த்தாண்டபுரம் வடக்கு பகுதியைச் சார்ந்த சுப்பிரமணியன், புஷ்பம், மயிலாடிபுதூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அஞ்சுகிராமம் பேரூராட்சி ஜேம்ஸ் டவுனில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணி, ஜேம்ஸ் டவுனைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் வீட்டில் ரூ.12 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறை கட்டிடம், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சிவனணைந்தபெருமாள், கணபதி ஆகியோருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீட்டையும், அங்கு மற்றொருவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி
அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி பேரூராட்சி ஒற்றையால்விளையைச் சேர்ந்த சீதா தங்கராஜ், முருகன், முத்துபாக்யலட்சுமி ஆகியோருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் தலா ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளையும், கலைஞர் குடியிருப்பு பகுதியில் தனிநபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முத்துகுமார், பேரூராட்சி செயல் அதிகாரிகள் லவ்லின் மேபா (மயிலாடி), திருமலைகுமார் (அஞ்சுகிராமம்), சங்கர நாராயணன் (கன்னியாகுமரி) மற்றும் உதவி பொறியாளர் பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.