குழித்துறை அருகே பரபரப்பு மாதா குருசடியில் கண்ணாடி உடைப்பு

குழித்துறை அருகே மாதா குருசடியில் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2017-02-12 23:00 GMT
குழித்துறை,

மாதா குருசடி

குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி.தெரு சந்திப்பில் மாதா குருசடி ஒன்று உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.  இந்தநிலையில், நேற்று காலை குருசடியில் மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், அங்கு ரத்தமும் சிதறி கிடந்தது.

காலையில் வழிபாடு நடத்த சென்றவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த  பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, மாதா குருசடியில் உண்டியல் எதுவும் உடைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், சொரூபத்தின் நெற்றியில் இருந்த தங்க பொட்டு அப்படியே இருந்தது. இதனால், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்ட நபர் குருசடி கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்