குறி சொல்வதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: கொள்ளையர்கள் 2 பேர், போலீசாரிடம் சிக்கினர்
நாகர்கோவிலில், குறி சொல்வதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கொள்ளையர்கள் 2 பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கண்காணிப்பு கேமரா மூலம் அவர்களை போலீசார் பிடித்தனர்.
நாகர்கோவில்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பெண்ணிடம் நகை பறிப்பு
நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவை சேர்ந்தவர் அருள்கோபி. இவருடைய மனைவி சரண்யா (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவன், சரண்யாவுக்கு குறி சொல்வதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றான்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது சரண்யா வீட்டின் பக்கத்து வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையரின் உருவம் பதிவாகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
அதில், சரண்யாவிடம் குறி சொல்வதுபோல் நடித்து நகையை மர்ம நபர் ஒருவன் பறித்து கொண்டு ஓடுவதுபோன்ற காட்சியும், அவருடன் சேர்ந்து வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த மேலும் 2 பேரும் ஓடுவதுபோன்ற காட்சியும் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது, நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களும் வெள்ளமடம் பகுதியில் வசிப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வெள்ளமடம் சென்றனர். அங்கு வாடகையில் வீட்டில் வசித்து வந்த 3 கொள்ளையர்களையும் பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் கொள்ளையர்களில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பல்வேறு திருட்டு சம்பவங்கள்
பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வெள்ளமடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் 2 பேரும் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் சிக்கிய 2 கொள்ளையர்களும் மாவட்டத்தில் எந்த பகுதியில் எல்லாம் திருடியுள்ளார்கள்? திருடிய பணம் மற்றும் நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்? என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.