பெரம்பலூரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவைக்கூட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர், அரியலூர் வட்ட பேரவைக்கூட்டம் நேற்று துறைமங்கலத்தில் நடந்தது.

Update: 2017-02-12 22:30 GMT
பெரம்பலூர்,

கூட்டத்திற்கு வட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசன் மண்டல தலைவர் பீர், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர்கள் அழகர்சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பு அகஸ்டின், ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு முருகேசன், போக்குவரத்துக்கழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையினை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு காலபயன்களை உடனே வழங்க வேண்டும், சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களின் முந்தைய பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசின் ஆணைக்கேற்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் திரளான பேர் கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலஅமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்