அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ

அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2017-02-12 22:45 GMT
இலுப்பூர்,

குப்பை கிடங்கில் தீ

அன்னவாசல்- புதுக்கோட்டை சாலையில் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய குப்பைக்கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் நேற்று காலையில் வழிப்போக்கர் ஒருவர் தீ வைத்ததன் காரணமாக குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

புகை மண்டலம்

பின்னர் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து பலமணி நேரம் போராடி அணைத்தனர். அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது குறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்