கார் மீது லாரி மோதல்: சிறுவன் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
காவேரிப்பட்டணம்,
கார் மீது லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜின்னா ரோடு தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவர் காவேரிப்பட்டணத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை தேவராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
காரில் தேவராஜ், அவரது மகன் இளங்கோ (38), அவரது மனைவி பத்மாவதி (36), இவர்களது மகன்கள் கோகுல் (16), ராகுல் (13) ஆகியோர் இருந்தனர். அவர்கள் வந்த கார் காவேரிப்பட்டணம் - கிருஷ்ணகிரி இடையே திம்மாபுரம் உயர்நிலைப்பள்ளி பக்கமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் பின்னால் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி, அரியானா மாநில பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
மோதிய வேகத்தில் காரின் மேல் லாரியின் முன்புற சக்கரங்கள் ஏறியது. தொடர்ந்து லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தேவராஜ், அவரது பேரன் ராகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். லாரிக்கு அடியில் கார் சிக்கி கொண்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு கூடினார்கள்.
அவர்கள் இது குறித்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதே போல தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றார்கள். இதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு ஒரு கிரேன் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப் பட்டது.
உடல்கள் மீட்பு
பின்னர் அந்த லாரி கிரேன் மூலம் தூக்கப்பட்டு அருகில் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு இடிபாடுகளுக்கு உள்ளே படுகாயத்துடன் இருந்த இளங்கோ, பத்மாவதி, கோகுல் ஆகிய 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்தில் இறந்த தேவராஜ், அவரது பேரன் ராகுல் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக காவேரிப்பட்டணம் - கிருஷ்ணகிரி இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.