ஓசூர் அருகே 2 குழுக்களாக பிரிந்த 53 யானைகள் பொதுமக்கள் அச்சம்
ஓசூர் அருகே 53 யா னைகள் 2 குழுக்களாக பிரிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஓசூர்,
53 யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டிற்கு வந்தன. அந்த யானைகளுடன் ஏற்கனவே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 3 யானைகளும் சேர்ந்து கொண்டன. இந்த 53 யானைகளும் சானமாவு அருகே உள்ள ஆழியாளம், கோபசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை 53 யானைகளையும் வனத்துறையினர் போடூர்பள்ளம் காட்டிற்கு விரட்டினார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவுக்காக 53 யானைகளும் போடூர்பள்ளம் காட்டில் இருந்து வெளியே வந்தன. இந்த யானைகள் கொம்மேப்பள்ளி, அட்டகுறுக்கி, பிள்ளைகொத்தூர், ராமாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குள் சென்று அங்கிருந்த விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த வாழை, தென்னை, தக்காளி, மாமரங்களை சேதப்படுத்தின. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினார்கள்.
பொதுமக்கள் அச்சம்
இதில் 40 யானைகள் கொம்மேப்பள்ளி வனப்பகுதிக்கும், 13 யானைகள் போடூர்பள்ளம் காட்டிற்கும் பிரிந்து சென்றன. 2 பிரிவுகளாக யானைகள் பிரிந்துள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த யானைகள் பகல் நேரத்திலேயே விவசாய நிலங்களில் சுற்றுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் பிள்ளைகொத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் யானைகள் தனியாக சுற்றுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த பகுதிகளுக்கு சரியான பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளும் அச்சமடைந்துள்ளனர். தற்போது 2 குழுக்களாக பிரிந்து கிடக்கும் யானைகளை ஒன்றாக இணைத்து கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.