டிராக்டர் மீது மோதி கீழே விழுந்த முன்னாள் கவுன்சிலர் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பலி

உப்பிலியபுரம்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சிவக்குமார்(வயது 41). இவர் தளுகை ஊராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலர். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். செட்டிக்காடு மாரியம்மன் கோவில் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வாகனம் வந்ததால் மோட்டார் சைக்கிளை ரோட்டோரம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதினார். இதில் சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் மீது மோதிய வாகனம் எது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.