சிரிப்பில் தான் சந்தோஷம் இருக்கிறது: தோல்வியை கண்டு யாரும் துவண்டு விடக்கூடாது நடிகர் ரமேஷ்கண்ணா பேச்சு

சேலம்,
சேலம் ராஜாஜி ரோட்டில் உள்ள வின்சர் கேசில் ஓட்டலில் ரோட்டரி மாவட்டம் 2982–ன் சார்பில் சமுதாய தன்னுயர்வு கருத்தரங்குநேற்று நடைபெற்றது. மாவட்ட ஆளுனர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ரோட்டரி சமுதாய தன்னுயர்வு தலைவர் செல்வமாளிகை மாணிக்கம், வக்கீல் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார ரோட்டரி சமுதாய தன்னுயர்வு ஒருங்கிணைப்பாளர்களும், முன்னாள் மாவட்ட ஆளுனருமாகிய ஜோசப் சுரேஷ்குமார், சிவஞான செல்வம் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ரமேஷ்கண்ணா மற்றும் டி.வி.நடிகை ஸ்ரீ சுகாஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ்கண்ணா பேசும் போது, ‘பொதுவாக சிரிப்பவர்கள் கஷ்டப்படுவதில்லை. கஷ்டப்படுபவர்கள் சிரிப்பதில்லை. ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவர்களுக்கு தோல்வி இருக்காது. வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் அதை நினைத்து மனம் வருந்தாமல் சிரித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சிரிப்பில் தான் சந்தோஷம் இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. நாம் எப்படி இருக்கிறமோ? அதேமாதிரி நாமாக இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்’ என்றார்.
இந்த கருத்தரங்கில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.