செம்மரக்கட்டை கடத்திய 2 பேர் கைது வனத்துறையினர் மீது கற்கள் வீசியதால் பரபரப்பு

திருப்பதி அருகே ராகிமனுகுண்டா வனப்பகுதியில் ஆந்திர மாநில செம்மர கட்டை கடத்தல் தடுப்பு குழுவினர் சப்–இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று காலை 4 மணியளவில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்

Update: 2017-02-12 23:00 GMT

திருப்பதி,

திருப்பதி அருகே ராகிமனுகுண்டா வனப்பகுதியில் ஆந்திர மாநில செம்மர கட்டை கடத்தல் தடுப்பு குழுவினர் சப்–இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று காலை 4 மணியளவில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அவர்களை பார்த்த தடுப்பு குழுவினர் அந்த கும்பலில் இருந்தவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் செம்மர கட்டை கடத்தல்காரரர்கள் கற்களையும், கட்டைகளையும் சிறப்பு குழுவினரை நோக்கி வீசிவிட்டு தப்ப முயன்றனர். எனினும் சிறப்பு படையினர் அவர்களில் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 33 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார், சேலம் மாவட்டத்தைசேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்தது. இருவரையும் அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்