நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் ஜெ.என்.ரோடு பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன் மனைவி ஞானமணி (வயது 70).

Update: 2017-02-12 21:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஜெ.என்.ரோடு பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன் மனைவி ஞானமணி (வயது 70). இவர் பெரியகுப்பத்தில் உள்ள தேவாலயத்துக்கு நேற்று சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென ஞானமணி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஞானமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்