உடையார்பாளையம் அருகே ஜல்லிக்கட்டுபோட்டி: சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
உடையார்பாளையம் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.;
உடையார்பாளையம்,
சீறிப்பாய்ந்த காளைகள்...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிலிச்சிகுழி கிராமத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோனல்சந்திரா, ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு அடக்கினார்கள். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு குத்துவிளக்கு, கட்டில், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. களத்துக்கு வெளியே நின்ற பொதுமக்கள் கோஷமிட்ட படியே மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
4 பேர் காயம்
ஜல்லிக்கட்டின் போது காளைகள் முட்டியதில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி, ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.