கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் முற்றுகை

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவகோட்டை போலீஸ் நிலையம் முற்றுகை

Update: 2017-02-12 22:00 GMT

தேவகோட்டை

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை கைது செய்தும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேவகோட்டை டவுன் போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதன்காரணமாக போலீஸ் நிலையத்தின் முன்பக்க கதவை போலீசார் அடைத்துவிட்டனர். இருப்பினும் முற்றுகையிட்டவர்கள் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போலீஸ் நிலைய பகுதியில் பதற்றமான சூழல் இருந்தது.

மேலும் செய்திகள்