சுகாதாரமற்ற வகையில் இறைச்சி விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருத்தங்கல் பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இறைச்சி விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருத்தங்கல்,
திருத்தங்கல் பகுதிகளில் இறைச்சி கடை நடத்துவோர் நகராட்சியில் செயல்படும் ஆடு அடிக்கும் இடத்தில் தினமும் ஆடுகளை வதை செய்து இறைச்சியில் சீல் வைத்து தரமானது என்று உறுதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் பலர் இதனை பின்பற்றுவது இல்லை. ஆடு அடிக்கும் கொட்டிலுக்கு கொண்டு செல்லாமல் தங்களது கடையின் அருகே ஆடுகளை அறுத்து விற்பனை செய்துவருகிறார்கள். சுகாதாரமற்ற வகையில் ஆடுகளை அறுத்து இறைச்சி வியாபாரம் செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. சிலர் கெட்டுப்போன இறைச்சியினை விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.