பாதுகாப்புக்காக மணிமுத்தாறில் இருந்து போலீசார் ஈரோடு வருகை

தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பினை பலப்படுத்தி வருகிறார்கள்.

Update: 2017-02-12 22:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியனில் இருந்து 50 அதிவிரைவுப்படை போலீசார் நேற்று ஈரோடு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அணிவகுத்து நின்றனர். பின்னர் அனைவரும் கோபி சென்றனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் பதற்றம் எதுவும் இல்லை. உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அதிவிரைவுப்படை போலீசார் வந்து உள்ளனர். அவர்கள் கோபியில் தங்கி இருப்பார்கள். ஏதேனும் தேவை என்றால் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.

மேலும் செய்திகள்