கம்பத்தில் ரேக்ளா பந்தயம்

கம்பத்தில் ரேக்ளா பந்தயம்

Update: 2017-02-12 21:45 GMT
கம்பம்,

கம்பத்தில் ரேக்ளா பந்தயம் நடந்தது. இதில், வருசநாடு, குமணன்தொழு, கம்பம், அனுமந்தன்பட்டி, கூடலூர், தேவாரம், புதுப்பட்டி உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இரட்டை மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். பூஞ்சிட்டு பிரிவில் 18 ஜோடிகளும், கரிச்சான் பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு வகையில் 11 ஜோடிகளும், பெரிய மாடு பிரிவில் 7 ஜோடிகளும் என மொத்தம் 47 ஜோடிகள் கலந்து கொண்டன. கம்பம்மெட்டு சாலை முதல் அடிவாரம் வரை ஒவ்வொரு பிரிவுக்கும் எல்லை தனியாக குறிக்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

மேலும் செய்திகள்