தூத்துக்குடி–மேல்மருவத்தூருக்கு ஆன்மிக ஜோதி தொடர் ஓட்டம்
தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு ஆன்மிக ஜோதி தொடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு ஆன்மிக ஜோதி தொடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.
ஆன்மிக ஜோதி
தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தைப்பூச பெருவிழா மற்றும் மேல்மருவத்தூருக்கு ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. விழாவையொட்டி அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மக்கள் வளமுடன் வாழவும், இயற்கை சீற்றம் தணியவும், மழைவளம் வேண்டியும் வேள்விபூஜை நடந்தது. வேள்வி பூஜையில் இருந்து தீபம் ஏற்றி ஆன்மிக ஜோதி தொடர் ஓட்டத்தை அனல்மின்நிலைய தலைமை என்ஜினீயர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் அன்னை ஆதிபராசக்திக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பங்காரு அடிகளாரின்...
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு ஆன்மிக ஜோதி தொண்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பக்தர்கள் வீடுகளுக்கு சென்று ஜோதி ஏற்றி வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்பிறகு ஜோதி மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மார்ச் மாதம் 3–ந் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஜோதி மூலம் பங்காரு அடிகளாரின் 77–வது பிறந்தநாள் வேள்வி பூஜைக்கு தீபம் ஏற்றப்படுகிறது.
நிகழ்ச்சியில் என்ஜினீயர் சோமசுந்தரம், பேராசிரியை இந்திராகாந்தி, ஆன்மிக இயக்க பொருளாளர் வடிவேல்ராஜன், துணைத்தலைவர் பண்டார முருகன், தெர்மல் சக்தி பீடத்தலைவர் பழனியப்பன், வேள்விக்குழு பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.