தாராபுரத்தில் ஜவுளி வியாபாரி மனைவியுடன் தற்கொலை
தாராபுரத்தில் ஜவுளி வியாபாரி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தாராபுரம் நடுபஜனை மடத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). ஜவுளி வியாபாரி. அவரது மனைவி தேன்மொழி (58). இவர்களுக்கு 3 மகள்கள், அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் ஆறுமுகமும், தேன்மொழியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுகாலை வெகு நேரமாகியும் ஆறுமுகத்தின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.
அப்போது அவர்கள் அருகே காலியான விஷமாத்திரை பாக்கெட்டுகள் கிடந்தன. சத்தம் கொடுத்து பார்த்தும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அவர்கள் அருகே சென்று பார்த்தபோது ஆறுமுகமும், தேன்மொழியும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை கொண்டது தெரிய வந்தது.
உறவினர்கள் காரணமா?
பின்னர் இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். போலீசார் தொடர்ந்து ஆறுமுகத்தின் வீட்டை சோதனை செய்ததில் காலியான விஷமாத்திரை பாக்கெட்டுகளும், ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் ஆறுமுகம் தனது திருமண நாள், மற்றும் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாள் ஆகியவற்றை எழுதியும், மற்றொரு பக்கத்தில் எங்களது சாவுக்கு காரணம் என தனது உறவினரின் பெயர், அவரது மனைவி பெயர் மற்றும் அவர்களது மகன் ஆகியோர் தான் என்று எழுதி உள் ளார். மேலும் தனது மகள்களின் பெயர்களையும் எழுதி அவர்களுக்கு நன்றி என்றும் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து கடிதத்தில் எழுதி வைத்துள்ள உறவினரின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.