எய்ம்ஸ் மருத்துவகல்லூரி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி அமைக்கக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

Update: 2017-02-11 22:45 GMT
தஞ்சாவூர்,

ஆர்ப்பாட்டம்

எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான போராட்டக்குழு சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், மனித நேய மக்கள் கட்சி கலந்தர், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் அருணாசலம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் சர்வதேச தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனையை தாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கவர்னரிடம் மனு

ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் வக்கீல் முத்து.மாரியப்பன், விளிம்பு நிலை மக்கள் விழிப்புணர்வு இயக்க மாநில நிர்வாகி ராஜராஜன், சி.பி.எம்.எல். லிபரேசன் கட்சி மாவட்ட தலைவர் ஜீவா, செங்கிப்பட்டி- சானூரப்பட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், பொன்.வைத்தியநாதன், நந்தகுமார், வணிகர் சங்கம் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டம் முடிவில், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனையை பிரதமர் மோடி உடனே அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் தமிழக கவர்னரை சந்தித்து, பிரதமருக்கு அனுப்புவதற்காக கோரிக்கை மனுவை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்