தோடர் இன மக்களின் கோவில் கூரை மாற்றப்பட்டது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
தோடர் இன மக்களின் கோவில் கூரை 8 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
ஊட்டி,
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள கார்டன் மந்துவில் தோடர் இன மக்களின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரை மாற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தோடர் இன மக்கள்
நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்கள், காட்டு நாயக்கர்கள், இருளர்கள் போன்ற ஆதிவாசி மக்கள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த ஆதிவாசி மக்களின் திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் பாரம்பரியமிக்கதாகவும், பழமைவாய்ந்ததாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மந்து என்று அழைக்கப்படுகின்ற 14 இடங்களில் தோடர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த 14 மந்துகளுக்கு தலைமையிடமாக ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்து விளங்கி வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கார்டன் மந்து உள்ளது. இந்த மந்தில் தோடர் இன மக்களின் தெய்வமான “நார்ஸ் நார்ஸ்” கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூரைவேயும் பணி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான தோடர் இனமக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து கூரைவேயும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இனமக்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள கூரை தற்போது மிகவும் பழுதடைந்து இருப்பதால் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டோம். நீலகிரி மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்க கூடிய பிரம்பு, மூங்கில், அவில் என்கிற புல் போன்ற பொருட்களின் மூலம் தோடர் இன மக்களின் கோவில்கள் கட்டப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் வனத்துறையினர் அனுமதியுடன் ஆதிவாசி மக்கள் சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் சென்று கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊட்டி கார்டன் மந்துவில் உள்ள “நார்ஸ் நார்ஸ்” கோவிலின் கூரை மாற்றப்பட்டு புதிய புற்களை கொண்டு வேயும் பணி இன்று (நேற்று) நடைபெற்றது. பின்னர் தோடர் இனமக்கள் தங்களது பாரம்பரிய ஆடை அணிந்து நடனம் ஆடினர். மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தாவரவியல் பூங்கா அருகே இந்த மந்து உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கூரைவேயும் பணியை கண்டு ரசித்தனர்.