ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வேண்டுகோள்

நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை பயனாளிகள் தேர்வு செய்தல் தொடர்பாகவும், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் 100 சதவீதம் வெற்றியடையும் பொருட்டும் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை 100 சதவீத இலக்கை அடையவில்லை. எனவே இதுவரை ஆதார் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசம் உள்ள அசல் ஆதார் அட்டை நகல், செல்போன் எண் விவரங்களை ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.