முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர்
சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அந்த பகுதியில் 2 பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த பொதுக்குழாய்களில் சுமார் 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது.
இதனால் குடங்களை வரிசையாக வைத்து கொண்டு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும் முன்னால் வருபவர்கள் மட்டுமே தண்ணீர் பிடிக்க முடிகிறது. இதனால் கால்கடுக்க காத்திருந்தது தான் மிச்சம் என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
சாலை மறியல் செய்ய முயற்சி
இதன்காரணமாக பொதுமக்கள் தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங் களுடன் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முற்றுகை
பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஏற்கனவே ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். சாலை மறியல் செய்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்குமாறும் போலீசார் வலியுறுத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தர்ணா போராட் டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோணியார், மருதமுத்து ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ராகலாபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
மேலும் நத்தம் எம்.எல்.ஏ.ஆண்டிஅம்பலமும் அங்கு வந்தார். பின்னர் அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.