மாட்டு வண்டி பந்தயம்
சாயல்குடி அருகே நரிப்பையூர், குதிரைமொழி, மூக்கையூர், ஐந்து ஏக்கர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஐந்து ஏக்கர் கிராமத்தில் களஞ்சிய விநாயகர், முருகன், முனீசுவரர் கோவில் வருாடாந்திர பொங்கல் விழா நடைபெற்றது.
சாயல்குடி,
விழாவுக்கு ஐந்து ஏக்கர் சங்க தலைவர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாக தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்கள் கடற்கரைக்கு சென்று அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு வண்டி பந்தயத்திற்கு 6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மறவர் கரிசல்குளம் கிராமம் மயில் என்பவரது மாடுகள் முதலிடத்தையும், சிவகங்கை மாவட்டம் தூதை கிராமம் வெள்ளையன் என்பவரது மாடுகள் 2-வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிராமம் பாக்கியலெட்சுமியின் மாடுகள் 3-வது இடத்தையும் பெற்றன.
இதேபோல் சிறியமாடுகள் பிரிவில் 4 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமம் பெருமாள்சாமி என்பவருடைய மாடுகள் முதலிடத்தையும், மேலச்செல்வனூர் கிராமம் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடுகள் 2-வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் சித்துவன்நாயக்கன்பட்டி கிராமம் வீரமோகன் என்பவரது மாடுகள் 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொருளாளர் ஆதிராமு, நரிப்பையூர் செயலாளர் பச்சமால், கோவில் பூசாரி சேதுலிங்கம், விழா கமிட்டியினர் உள்பட நரிப்பையூர், குதிரை மொழி, மூக்கையூர், ஐந்து ஏக்கர் முனியசாமி கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.