கணவர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து சாவு

விருதுநகர் அருகே உள்ள சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி சின்னஜக்கம்மாள்(வயது 23). 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.

Update: 2017-02-11 22:00 GMT

விருதுநகர்,

பரமசிவம், தனது தாயார் சண்முகத்தாயை சரியாக கவனிக்கவில்லை எனக்கூறி சின்னஜக்கம்மாளை கண்டித்தாராம். இதனால் மனம் உடைந்த சின்னஜக்கம்மாள் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்