ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ் பாபநாசம் ரெயில் நிலையத்தில் மேலும் 6 மாதம் நின்று செல்லும்

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் இருமுறை (வியாழன், சனி) எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2017-02-03 22:30 GMT

மதுரை,

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் இருமுறை (வியாழன், சனி) எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருப்பதி செல்கிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில் (வ.எண்.16779/16780) பாபநாசம் ரெயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்கிறது.

இந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு (ஆகஸ்டு மாதம் 4–ந் தேதி வரை) தற்காலிகமாக இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரெயில்வே உதவி வர்த்தக மேலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்