மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவர் கைது

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-01-29 23:28 GMT

மும்பை,

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவரை நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மனைவி கொலை

மும்பை முல்லுண்டு மேற்கு பி.கே. சாலையில் உள்ள ஸ்ரீராம் கட்டத்தில் வசித்து வந்தவர் மகாதலேக்கர்(வயது35). இவரது மனைவி ஸ்ரேயா(30). மகாதலேக்கர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் ஸ்ரேயா அங்குள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அண்மையில் ஸ்ரேயா வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மகாதலேக்கர் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு தலைமறைவாகி விட்டார்.

கணவர் கைது

இது குறித்து முல்லுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மகாதலேக்கரை வலைவீசி தேடிவந்தனர். அவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்திற்கு தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில், அவர் தானே மாவட்டம் கல்யாணில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மகாதலேக்கரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்