முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
கன்னியாகுமரியில், முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி,
நகை பறிக்க முயற்சி
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 54). இவரது மனைவி கீதா(50). இவர்கள் சர்ச் தெரு சந்திப்பில் பூக்கடை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கீதா பூக்கடையை பூட்டிவிட்டு கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அங்கு வந்தார். அவர் கீதாவிடம் முகவரி கேட்பதுபோல் பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கீதாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்கச்சங்கலியை பறிக்க முயற்சி செய்தார்.உடனே சுதாரித்துக்கொண்ட கீதா ‘திருடன்.. திருடன்...’ என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து அவரது கணவர் மணி, கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் கிரேசியஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் விஷ்ணு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அதிகாலையில் ரோந்து சென்ற போலீசார், கன்னியாகுமரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது, மதுரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(20) என்பதும், இவர்தான், கீதாவிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.