திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிக்கும் இயக்குனர் தகவல்
மார்ச் மாதத்துக்கு பிறகு திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிக்கும் என்று விமானநிலைய இயக்குனர் குணசேகரன் கூறினார்.;
திருச்சி,
கலந்தாய்வுகூட்டம்
சேவை மற்றும் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விமானம், ரெயில் மற்றும் சாலையில் பயணிப் பவர்களின் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன், ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் அருண்தாமஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது விமானநிலைய இயக்குனர் குணசேகரன் பேசியதாவது:-
புதிய முனையம்
திருச்சியில் இருந்து சென்னை வழியாக டெல்லிக்கு ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை தொடங்கும். திருச்சி விமான நிலையத்தில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டு பயணிகளாக தான் உள்ளனர். உள்நாட்டு பயணிகளின் பயன்பாடு குறைவு. மார்ச் மாதத்துக்கு பிறகு திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிக்கும். ஆனால் இதற்கான வழித்தடம் கிடைப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதற்கான இடத்தை இன்னும் விமானநிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. திருச்சியில் இருந்து மஸ்கட், அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானசேவை இயக்கப்படும்போது ஏற்றுமதி விரிவுப்படுத்தப்படும். திருச்சி விமான நிலையத்தில் தற்போது 250 பயணிகள் வருவதற்கும், 250 பயணிகள் செல்வதற்கும் மட்டுமே வசதி உள்ளது. ஆனால் தற்போது 3 ஆயிரம் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறார்கள். ரூ.749 கோடியில் விமானநிலைய புதிய முனைய கட்டிடத்துக்கான பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த கட்டிடம் கட்டப்பட்டால் 1500 பயணிகள் வருவதற்கும், 1,500 பயணிகள் செல்வதற்கும் வழிவகை கிடைக்கும். ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நிர்வாகிகள் தாமஸ், செல்வராஜ், அண்ணாதுரை, ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.