புதுக்கோட்டையில் குடியரசு தின விழா தேசிய கொடியை கலெக்டர் கணேஷ் ஏற்றினார்
ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியகொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தேசியகொடி ஏற்றி வைத்தார்
இந்தியா முழுவதும் நேற்று 68-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்த ஜீப்பீல் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்க விட்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் தியாகிகளுக்கு கதர் ஆடைகளை அணிவித்தார். 60 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 64 ஆயிரத்து 515 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்தி-மக்கள் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 26 துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 280 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் பரிமளாதேவி, மருத்துவ துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதை பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் தங்க நாணயம் வழங்கினார்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
பின்னர் 9 பள்ளிகளை சேர்ந்த 830 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவர்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் சிறுவர், சிறுமியர் வேடமணிந்து கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசையும், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசையும் பெற்றன. முடிவில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைபெற்றது.
சோதனை
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை உதவி கலெக்டர் அம்ரீத், வேளாண் இணை இயக்குனர் அண்ணாமலை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.