தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்களில் மின்உற்பத்தி நடைபெறாததால், 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-01-25 22:35 GMT
தூத்துக்குடி,

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் அமைக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றது. இதனால் மின்உற்பத்தியின் போது எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

3-வது எந்திரத்தில்...

இந்த நிலையில் அனல்மின்நிலையத்தில் உள்ள 3-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாய் திடீரென பழுதடைந்தது. இதனால் அந்த எந்திரத்தில் நேற்று மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

420 மெகாவாட் பாதிப்பு

மேலும் 2-வது மின்சார உற்பத்தி எந்திரம் மின்தேவை குறைவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 எந்திரங்களில் மின்சார உற்பத்தி நடைபெறாததால், அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்