கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் குடும்பத்தினருடன் மீனவர்கள் போராட்டம் கருப்புக்கொடி ஏந்தி பங்கேற்றனர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கடற்கரை சாலையில் கருப்புக்கொடி ஏந்தி குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் போராட்டம்
புதுவையில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் தேங்காய் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காலை கடற்கரை சாலையில் உள்ள காந்திசிலை முன்பு கூடினர். அங்கு அவர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும், மத்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
வெறிச்சோடிய மீன் கடைகள்
மீனவர்களின் போராட்டம் காரணமாக மார்க்கெட்டுக்கு மீன்கள் கொண்டு வரப்படவில்லை. இதனால் புதுவை பெரியமார்க்கெட், சின்னமார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், முதலியார்பேட்டை மார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் உள்ள மீன்அங்காடிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.