சரஸ்வதி வித்யாபவன் கல்வி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்

டோம்பிவிலியில் உள்ள சரஸ்வதி வித்யாபவன் கல்வி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.

Update: 2017-01-20 23:00 GMT
மும்பை,

டோம்பிவிலியில் உள்ள சரஸ்வதி வித்யாபவன் கல்வி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.

கட்டிடம் திறப்பு


தானே டோம்பிவிலி கிழக்கு, சோனார் பாடாவில் உள்ள சரஸ்வதி வித்யாபவன் கல்வி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சங்கரா வித்யாலயா கட்டிடம் மற்றும் விளையாட்டு பள்ளி திறந்து வைக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு கட்டிடத்தையும், என்.இ.எஸ்., எஸ்.வி.பி. விளையாட்டு பள்ளியையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் விழாவையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டியும் தொடங்கி வைக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், போர்வை, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்வி வளாகம் அருகே உள்ள தாவடி கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பு அம்சமாக என்.சி.சி. மாணவர்கள் குதிரைகளில் அணிவகுப்பு நடத்தினர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை என்.இ.எஸ். மற்றும் சரஸ்வதி வித்யாபவன் கல்வி குழும நிறுவனர் ஆர்.வரதராஜன் செய்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வி குழும இயக்குனர் பாலசுப்ரமணியன், பாண்டியன், பழனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்