ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் வக்கீல் சங்கங்கள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று வக்கீல் சங்கங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
சென்னை,

இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எங்களது சங்கத்தின் அவசர செயற்குழு நேற்று காலையில் நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களது இந்த போராட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரானது கிடையாது’ என்று கூறினார்.
இதேபோல, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை பெண் வக்கீல்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன் (எம்.பி.ஏ.) உள்ளிட்ட அமைப்புகளும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து தீர்மானம் இயற்றியுள்ளது.